Wednesday, January 11, 2012

நம்பிக்கை :))


நம்பிக்கை 


குடும்பம்     என்னும்      வண்டியின் அச்சாணி
வாழ்க்கை  என்னும்      மரத்தின்       வேர்
முயற்சி       என்னும்     ஆழியின்      அலை
மனிதன்       என்னும்    உடலின்       மூச்சு
வெற்றி என்னும் தீயின் விறகு
நாளை என்னும் சூரியனின் வெளிச்சம்
இதுவே நம்பிக்கை


ராமன் மீது சீதையும்
கிருஷ்ணன் மீது திரௌபதியும்
கோவலன் மீது கண்ணகியும்
ஹரிச்சந்திரன் மீது சந்திரமதியும்
கைகேயின் மீது தசரதனும்
கடவுளின் மீது மனிதனும்
மனிதன் மீது கடவுளும்
கொண்டது நம்பிக்கை



Tuesday, January 10, 2012

பலூன்


விற்பவனும்
வாங்குபவனும்
விற்கப்படுவதும் ஒன்றே!!!

காற்றடைத்த பை........



என் முதல் முயற்சி கவிதையில்......

Monday, January 9, 2012

கைக்கு அருகில் ஒரு பொக்கிஷம் :)

எனது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்துக்கள்.......



எழுதும் எண்ணம் மேலிட
சோம்பல் என்னை கட்டியிழுக்க
இந்த இழுபறியில் மூழ்கி
வழக்கம்போல் சோம்பல் வெற்றி பெற்றுவிட......

நான் நின்றேன் தோற்று..... :(

இந்த பதிவு என்னுடையது அல்ல.... நான் இணையத்தளத்தில் இலக்கில்லாமல் உலா வந்தபொழுது தடுக்கி விழுந்த ஒரு பொக்கிஷம்............பல நாட்கள் திறக்காமல் இருந்தால்தானே அது பொக்கிஷம்?......................அப்போ இது கண்டிப்பா பொக்கிஷம் தான்.......................பல மாதங்களாக என்னுடைய கண்ணில் கூட படாமல் இருந்தது........இன்று வழக்கம் போல் சுத்தம் செய்யும் முயற்சியில் கணினியை குடைய முற்பட்ட பொழுது கண்டுபிடித்தேன்.......எங்கே எப்போ பார்த்தேன் தெரியவில்லை.......அனைவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு பதிவு..........இதோ உங்களுக்காக......

இந்த பதிவை மற்றவர்களோடும் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் ............கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் அறிய பொக்கிஷங்களை அறியாமலேயே வாழ்கிறோம் நாம்............

இதை அறிந்துக்கொள்ளும் விதமாக இருந்தது இந்த தொகுப்பு.......



சீக்கிரமே மற்றும் ஒரு பதிவோடு உங்களை சந்திக்கிறேன் ...............



There was an error in this gadget