Wednesday, April 30, 2014

பிறந்தநாள் வாழ்த்து


ஏன் உயிரினும் மேலான சுதா அம்மாவிற்கு 


ஆரபி-யில் அரவணைத்து 
ஆபோகி-யில் அன்பு காட்டி 
பைரவியில் பாசம் பொழிந்து 
கானடா-வில் கண்டித்து  
தன்யாசி-யால் தவறு திருத்தி 

ஆனந்த பைரவி-யில் ஆசானாய் 
தோடி-யில் தோழியாய் 
வாசஸ்பதி-யில் வழிகாட்டியாய் 
தர்மவதி -யில் தமக்கையாய் 

மோஹன-தில் மூச்சாகி 
பூபாளத்தில் பேச்சாகி 
நாட்டையில் நினைவாய் 
செஞ்சுருட்டி-யால் செயலாகி 

என்னில் எல்லாமுமாய் 
ஆகிவிட்ட உன்னை 
நீ என்பதா 
நான் என்பதா 

அனைத்தும் என்பதால் 
அன்னை என்பதா 
அன்பால் அரவணைப்பால் 
பண்பால் பாசத்தால் 

இமயமாய் ஓங்கி
இன்பத்தால் நிறைக்கும் 
ஈன்றவளோடு ஒப்பிட்டு 
இறை என்பேன் 

உங்களை - வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 

There was an error in this gadget