Thursday, March 12, 2015

Happy Birthday Sudha amma

A birthday dedicaton to the nightingale  


You are

Affectionate as aarabhi
Beautiul as bhoopalam
Calm as kambodhi
Dedicated as Dhanyasi

You manifest as

Mentor in mohanam
Confidante in kadhanakudhukalam
Guide in gowlai 
Sister in sindhubhairavi


Heartbeat in harikamboji
Launguage in lathangi
Thoughts in thenuka
Actions in aaboghi

You are the
voice that fills 
my world and soul
since everything is you 
Should I say -There
is no me sans You

Being actions, thoughts
love, passion, happiness
life,  joy, strength 
Is just one

And its Mom
And Mom is Goddess
So Goddess is you.

Have a wonderful B'day


Tuesday, March 10, 2015

தந்தை

வயிற்றில் சுமந்தது இல்லை - உன்னை
விந்தின் வழி உயிர் தந்தார்

உச்சி  முகர்ந்தது இல்லை - உன்னை

உதிரம் சிந்தி உழைத்துக் கொண்டிருந்தார்

உணவு ஊட்டியது இல்லை - உனக்கு

உன் உணவிற்காக ஓடாய் தேய்ந்துகொண்டிருந்தார்

ஆறத் தழுவியது இல்லை - உன்னை

அறத்தின் வழி நடக்க கற்றுக்கொடுத்தார்

அன்பாய் பேசியது இல்லை - உன்னிடம்

நீ அச்சப்படாமல் இருக்க அருகிருந்தார்

நீ பிறப்பதற்கு முன்பிருந்தே உனக்காக

தன்சோறு குறைத்து சொத்து சேர்த்தவர்

உனக்காக பெரிதாய் பலகனவு கண்டு

பறைசாற்றாமல் பண்பாய் வாழ கற்றுக்கொடுத்தவர்

செயலில் சிந்தனையில் மூச்சில் பிள்ளையின்

நலன் மட்டுமே சித்தமாய் கொண்டு

பாராட்டுகளுக்காகவும் தனக்கான தினத்திற்காகவும் காத்திராமல்

பாசம் மட்டுமே உயிர்மூச்சாய் கொண்டு

வாழும் நூலகமாய் வங்கியாய் பாதுகாவலனாய்

இருக்கும் தந்தைகளுக்கு இக்கவிதை சமர்ப்பணம்




Sunday, March 8, 2015

மகளீர் தினம் :)

பொறுமையின் வடிவம் நம்மை -சுமப்பவள் 
தாய் தெய்வம்போல் என்றீர் 

பூமி நம்மை சுமப்பதால் - அவளை 
பூமித் தாய் என்றீர் 
உயிர்கள் வாழ்வதற்க்கு வான்மழை - வேண்டும் 
வானம் பார்த்தபூமி என்றீர் 

வானம் பொய்த்தால் பூமியில் - பட்டினி 
பஞ்சம்  மேலிடும் என்றீர் 

கொட்டித் தீர்க்கும் இடிமின்னல் - கூடிய  
வான்மழையை  வருணன் என்றீர் 

வருணன் ஆண்மகன் அவன் - இறங்கினால்தான் 
பூமி வாழும் என்றீர் 

பூமித் தாய்  மரங்கள் - தாங்கி
வானுக்கு அனுப்பும் மழையை 

திருப்பித் தரும் வருணன் - தன்னலமில்லா 
கொடை  வள்ளல் என்றீர் 

இயற்கையிலும் பெண் வாழ - அவளே 
பாரம் சுமந்து உழைக்கவும்  

அவள் சிறப்புடன் வாழ - ஆண்மகன்  
தயையே தேவை என்றீர் 

பூமிக்கு மழை தேவையெனில் - மழைக்கு 
மரங்கள்சுழ் பூமி தேவையன்றோ 

வான்மழை பெய்யவும் பூமியின் - தயை 
வேண்டுமென்று சொல்ல ஏன்மறந்தீர்?

மகளீர் தின வாழ்த்துக்கள் :)


There was an error in this gadget