Tuesday, March 10, 2015

தந்தை

வயிற்றில் சுமந்தது இல்லை - உன்னை
விந்தின் வழி உயிர் தந்தார்

உச்சி  முகர்ந்தது இல்லை - உன்னை

உதிரம் சிந்தி உழைத்துக் கொண்டிருந்தார்

உணவு ஊட்டியது இல்லை - உனக்கு

உன் உணவிற்காக ஓடாய் தேய்ந்துகொண்டிருந்தார்

ஆறத் தழுவியது இல்லை - உன்னை

அறத்தின் வழி நடக்க கற்றுக்கொடுத்தார்

அன்பாய் பேசியது இல்லை - உன்னிடம்

நீ அச்சப்படாமல் இருக்க அருகிருந்தார்

நீ பிறப்பதற்கு முன்பிருந்தே உனக்காக

தன்சோறு குறைத்து சொத்து சேர்த்தவர்

உனக்காக பெரிதாய் பலகனவு கண்டு

பறைசாற்றாமல் பண்பாய் வாழ கற்றுக்கொடுத்தவர்

செயலில் சிந்தனையில் மூச்சில் பிள்ளையின்

நலன் மட்டுமே சித்தமாய் கொண்டு

பாராட்டுகளுக்காகவும் தனக்கான தினத்திற்காகவும் காத்திராமல்

பாசம் மட்டுமே உயிர்மூச்சாய் கொண்டு

வாழும் நூலகமாய் வங்கியாய் பாதுகாவலனாய்

இருக்கும் தந்தைகளுக்கு இக்கவிதை சமர்ப்பணம்




No comments:

Post a Comment

There was an error in this gadget