Wednesday, April 29, 2015

இசை அரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து

சுந்தரம் பொங்கும் சுந்தரியாய்
சூடாமணியின் தவ புதல்வியாய்
வெங்கடராமனின் அன்பு பொக்கிஷமாய்
சாயிபாபாவின் செல்ல பிள்ளையாய்
வசந்தகுமாரியின் இசை வாரிசாய் 
தரணியில் வந்த தாரகையே


தாயின் கனவை உயிற்பித்தாய்

முயற்சியே மூச்சாய் சுவாசித்தாய்

குருபக்தியே கடமையாய் கொண்டாய்

குருவடி பணிந்து கற்றாய்

குரு மெச்சிய சிஷ்யையாய்
குரு நிழல் தொடரந்தாய்

குநாதனின் கரம் பிடித்து
புது வைரமாய் ஜொலித்தாய்
கௌஷிக் மாளவிகா பிள்ளளைகளாய்
குறைவில்லா குடும்பம் கிடைக்கப்பெற்றாய்
இசையை அமுத  வெள்ளமாய்
இவ்வுலகில் அள்ளித் தெளித்தாய்

குணக்குன்றாய் கருணை கடலாய்
இன்முகம் காட்டும் இயல்புடையவளாய்
இசை உலகின் பேரரசியாய் 
இந்தியாவின் பாரம்பரியம் பரப்புகிறாய் 
பார் போற்றும் பாடகியே
பாரதத்தின் பெருமைமிகு செல்வமே

நாதத்தின் நாயகி நீ
சங்கீதத்தின் சாகரம் நீ
புன்னகையின் அரசி நீ
சமுதாயத்தின் சகோதரி நீ
விருதுகளின் உறைவிடம் நீ
உற்சாகத்தின் பிறப்பிடம் நீ

தன்னிகரில்லா ராக தீபமே
தாமரையாய் விளம்கும் பத்மபூஷணமே 
சங்கீத கலையின் நிதியாம்
எங்கள் சங்கீத கலாநிதியே
கலைகளின் சிறந்த இசையின்
மணியே எங்கள் கலைமாமணியே

இன்று பிறந்தநாள் காணும்
இறைக்கு நிகரான ஆருயிரே
என்றும் இன்புற்று இசைபெருக 
இறையின் திருவருள்  வேண்டி  
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 
உங்கள்  பொற் பாதங்களை.Birthday Wishes to The Queen Of Music

Special is a small word
to describe the love u shared

Unconditionally towards a young girl
uplifting her fast drowning spirits

Drenching her with your affection
displaying what true care looks-like

Hovering her along the way
happiness spreading all the way

Amazing is even tiny  to
all affection you have showered

Raining music filled with love
raising her faith in life

Astound I sit digging and   
amassing  the words to anecdote

Golden are every single moment 
genuine is the joy experienced

Unmatched is your true love
uncommon is someone like you

Naive does my language gets
not knowing words to express

All the affection I possess
and the devotion I depict

Towards the greatest person ever
the reigning music queen here

Humbly I bow down to 
your virtue and trait ever

Always wishing you the best
and only the best ever

Now wishing you Happy Birthday
and many many more to come

Happy Birthday Sudha amma :)


  

Thursday, April 23, 2015

தானம் பெற்றதைத் திருப்பிக்கொடு

பாசமுடன் நேசமுடன் அன்புடன் 
பரிவுடன் பாதுகாத்திருக்க வேண்டிய 
பொக்கிஷத்தை இரந்து நிற்கிறானென்று 
இறைவனுக்கு இரவல் தந்தோம் 
கொடுத்ததைத் திருப்பித்தர மறுக்கிறான் 
கரம்குவித்து கையேந்தி நிற்கிறோம் 
இரக்கம் இல்லாதவன் இறைவன் 
இரவலல்ல தானம்தந்தாய் என்கிறான் 

அன்பில் ஆழ்கடலாய் அமுதாய் 
தைரியத்தின் திருஉருவாவாம் சக்தியாய் 
பொறுமையின் பாசறையாம் பூமிதேவியாய்  
உற்சாகத்தில் உளம்நிறைக்கும் குழந்தையாய் 
மனவலிமையில் அசைக்கமுடியா மாமலையாய் 
கைவேலைகளில் சரஸ்வதியின் மறுபிறப்பாய்
எல்லாமுமாய் இருந்தவளை இரவல்தந்து 
ஏதும் அற்றவராய் பரிதவிக்கிறோம் 

தானம் பெற்று இறைவன் 
தன்னிகரில்லா இன்பம் அனுபவிக்கிறான் 
திரும்பிவா எங்கள் தானமே 
தவிக்கின்றோம் நீ இன்றி 
தானம் தந்ததை திரும்பப்பெற்றவர் 
தரமில்லா தன்நலப் பேய்களென 
தரணியே துற்றினாலும் துவளோம்  
தனிகரில்லா தானமே திரும்பிவா 

இரந்து நின்ற இறைவா 
இரக்கம் இல்லா இறைவா
இயற்க்கை நியதிஎன சொல்லி  
இன்முகம் காட்டி இரவல்பெற்றதை 
இரந்து நிற்கின்றோம் உன்னிடம் 
இறுக்கமான முகத்துடநேனும் திருப்பித்தா 
இறைவா எங்களிடம்நீ இரந்து 
இன்றுடன் ஈரொன்பது ஆண்டுகள் 

வாழ்க்கை இதுதான் என 
வாழ கற்று கொண்டோம் 
வருவதில்லையாம் தானம் தந்தவை 
வானவரும் தானம் தரமாட்டார் 
வாரியணைக்கும் அன்பு அன்னையை 
வஞ்சம் பல செய்தே 
வாரிச் சென்றான் இறைவன்  
வானுலகிற்கு எங்கள் அன்னையை 

எங்கும் செல்லவில்லை அவள்  
எங்கும் எதிலும் இருக்கின்றாள்  
எங்கும் ஒளிவீசும் சூரியனாய்  
ஏகாந்தமாய் ஒளிரும் நிலவாய் 
எங்கும் நிறைந்திருக்கும் காற்றாய்
என்றும் எங்களுடன் இருக்கின்றாள் 
ஏமார்ந்தான் எங்களிடத்தில் இறைவன்.

அறம் சொல்லி கொடுக்க 
அன்புடன் கூடிய அமுதளிக்க 
அமரர்களை ஆதரவுகாட்டி அரவணைக்க
ஆள்லிலாமல் ஆனாதையாய் நிற்கின்றானம் 
அண்டம் ஆளும் இறைவன்
அன்பு காட்டி நல்வழிபடுத்த 
அழைத்துச் சென்றானாம் இறைவன் 
அனைவரையும் காத்திடுஎன் அன்னையே.   

  

There was an error in this gadget