Monday, October 26, 2015

அந்த 15 நிமிடங்கள்

ஹாய் கவிதா "கதிர் எப்படி இருக்கார்? எங்க குட்டிய கூட்டிட்டு ஸ்கூலுக்கு கிளம்பியாச்சா? " என்று வினவிய பக்கத்துத் தெரு ரஞ்சனிக்கு "கதிர் நல்லா இருக்கார், காவ்யாவை ஸ்கூல்ல விட்டுட்டு அப்படியே ஆபீஸுக்கு ஓடனும் முக்கியமான ப்ராஜெக்ட் போய்ட்டு இருக்கு மாமி இன்னொரு நாள் சாவகாசமா வீட்டுக்கு வாங்களேன் பேசலாம்" என்றவள் காவ்யாவை தூக்கி வண்டியில் நிறுத்தியபடி போகலாமாடா தங்கம் என்று வண்டியை செலுத்தினாள். 

வழி நெடுகிலும் மகள் கேட்ட பல தரப்பட்ட விஷயங்களுக்கும் மிகப் பொருமையாக விளக்கங்கள் அளித்தவாறே அன்பு, கொஞ்சல், சிரிப்பு என பள்ளிக்கு முன் வந்து நிற்கிறது வண்டி. மகளை பள்ளியில் இறக்கிவிட்டு உச்சி முகர்ந்து "சாயம்காலம் வரேன் செல்லம்" என்று கூறிவிட்டு நகர்கிறாள். 

என்ன யோசணை எப்போ பார்த்தாலும்? ஒரு நேரம் காலம் வேண்டாம்?? சீக்கிரம் சாப்பிடு உன்னை ஸ்கூலில விட்டுட்டு வந்து எனக்கு நிறைய வேலை இருக்கு என்ற வேலைக்காரப் பெண்ணிண் குரல், எண்ண ஒட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட,  ருசி மட்டுமே சேர்த்து சமைத்த உணவில்  அறையும் குறையுமாக நிறைந்த வயிறுடன், புத்தகப்பையை முதுகில் சுமந்தவாறு அப்பெண்ணின் கரம் பிடித்து பள்ளிக்கு புறப்படுகிறாள் காவ்யா. 

வாசல்வரை வந்தவள் ஏதோ மறந்தவளாய் குடுகுடுவென உள்ளே ஓடுகிறாள். வீட்டின் ஓர் அறைக்குள் சென்று நொடிப்பொழுதில் வாடிய முகத்துடன் மீண்டும் வாசலுக்கு வந்து, காத்திருக்கும் வேலைக்காரப் பெண்ணின் கரம் பற்றி தெருவில் நடக்கிறாள். எத்தனை அழகான பேச்சுக்களும் சிரிப்புமாக இருந்த இந்த பயணம் இன்று வெறுமையாக, ஒரு வித நெருடலான அமைதியுடன் ஆகிவிட்ட அவலம் அந்த குழந்தையின் மனதை வாட்டுகிறது பாவம்.

காவ்யாவின் கேள்விகளுக்கு எப்போதும் பதில் சொல்லும் கவிதா அன்று எதோ நிணைவுகளில் தொலைந்தவளாய் தன் கேள்விகளை காதில் கூட வாங்காமல் எதோ இயந்திரம் போல் காரியங்கள் செய்வது தெரிந்தது காவ்யாவிற்கு. அதற்கு மேல் தொந்தரவு செய்ய மனமில்லாதவளாக மௌனமாக பள்ளிக்கு தயாராகிறாள் காவ்யா. 
அரக்கப்பரக்க அலுவலகம் கிளம்பிய கணவனிடம் "எனக்கு இன்னிக்கு முக்கியமான ஒரு பிரசண்டேஷன் இருக்கு நீங்க குழந்தையை ஸ்கூல்ல விட்டுட்டு ஆபீஸ் கிளம்புங்க என்று பதிலுக்காக காத்திராமல் வாசலுக்கு விரைகிறாள் கவிதா. என்றும் இல்லாத பதட்டம் பரபரப்பு என தன் மணைவியை முதல் முறை பார்ப்பவன் போல் பார்க்கிறான் கதிர். "சரி நான் குழந்தையை விட்டுடறேன் நீ நேத்திக்கு ராத்திரி முழுக்க துங்கவே இல்ல, ஒண்ணு ரெண்டு மாசமாவே உடம்பை கவணிக்கிறதே இல்ல, யூ ஆர் நாட் ஆல்ரைட்", என்றான் கதிர். "ஒண்ணும் இல்ல நான் நல்லா தான் இருக்கேன். இந்த பிராஜெக்ட் கொஞ்சம் எக்ஸ்ட்ரா டெண்ஷண் அவ்வளவு தான். இண்ணிக்கு லைவ் சரியா போயிட்டா அப்பறம் ப்ரீ ஆகிடுவேன் கவலை படாதீங்க" என்று செல்லமாக கணவனின் கண்ணத்தை தட்டி விட்டு. காவ்யாவிடம் "இன்னிக்கு அப்பா உன்னை ட்ராப் பண்ணுவார் கண்ணா அம்மாக்கு டைம் ஆச்சு" என்றபடி உச்சி முகர்ந்தாள். ஜாக்கிரதையா ஓட்டு என்ற கதிரை பார்த்து ஒரு புண்முறுவல் உதிர்த்துவிட்டு வண்டியை செலுத்துகிறாள். 

"அம்மா அம்மா இங்க பாரு மா என்னை பாரு மா" குழந்தையின் குரல் காதுகளில் விழுகிறதே தவிர கை கால் உடல் என்று எதுவும் அசைவே இல்லாது இருக்கிறது கவிதாவிற்கு. என்ன ஆயிற்று எனக்கு எங்கு இருக்கிறேன் நான்? என்னால் நகர முடியவில்லையே வலி பொறுக்க முடியாமல் இருக்கிறதே ஐயோ என்று மனம் அழுகிறதே தவிர வாயை திறந்து பேச  முடியவில்லையே. கண் முன் இருப்பவை அனைத்துமே மங்கலாக அல்லவா தெரிகிறது. சிரமப்பட்டு கையை தூக்கி தொளாவிய மனைவியின் கரம் பற்றி "சிரமப்படாதே கவிதா உனக்கு ஒன்னும் இல்லை சிக்கிரமே சரி ஆகிடும்னு சொல்லி இருக்கார் டாக்டர் என்று தைரியம் சொல்கிறான் கதிர். அவள் கண்களில் வழியும் கண்ணீரை துடைக்கிறான் "என்னமா மறுபடியும் நடந்ததை நெனைச்சு அழுகிறாயா? அழுது உடம்ப கெடுத்துக்காதே. இப்போதான் சரி ஆகிட்டு வருது. குழந்தை ஸ்கூலுக்கு போயாச்சு, உனக்கு மருந்து குடுத்துட்டு வேலைகாரி வந்ததும் நானும் ஆபீஸ்  கிளம்பறேன் நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடு அப்போ தான் சீக்கிரம் சரி ஆகும்". 
கதிர் அவன் பங்கிற்கு எதோ வயிற்றை நிரப்பிக்கொண்டு அலுவலகம் கிளம்ப ஆயத்தமாகிறான். 

எல்லோரும் மெச்சும்படியான குடும்ப வாழ்வு, வீடு, வேலை, சம்பளம் என குறையே இல்லாத வாழ்க்கை வாழ்ந்துவந்த கவிதாவிற்கு யாருடைய கண்பட்டதோ இன்று படுத்த படுக்கையாக  இருக்கிறாள். யாருக்காக இந்த ஓடம், எதற்காக இந்த அவஸ்தை உடல் வருத்தி நேரம் கால் இல்லாமல் உழைத்து ஆதாரத்தை விட்டுவிட்டோமே என்ற ஆதங்கம் அவளை வாட்டுகிறது. அந்த ஒரு 15 மணித்துளிகள் சாலையில் கவனம் செலுத்தி இருந்தால் இன்று யாரோ ஒருத்தி சோறு ஊட்டி தன் செல்வத்தின் கையை கடனென பிடித்து நடக்க வேண்டிய நிலை வந்திருக்காதே, என்றும் உற்சாகமாய் இருக்கும் கணவன் வாடிய முகத்துடன் தன்னை ஒரு கைக்குழந்தையைப் போல் கவனிக்க வேண்டிய நிலையும் வந்திருக்காதே. இறைவா இந்த ஞானோதயம் இரண்டு மாதங்கள் முன் அன்று காலை வந்திருக்கக் கூடாதா என்று புலம்புகிறாள்.

இயந்திரமாய் வேலைக்குச் சென்ற அந்த ஒரு காலை, சாலையில் பள்ளம் இருந்ததை கவனிக்காமல் வண்டியை செலுத்தியதன் விளைவு நான்கு மாதங்கள் தன்னை படுக்கையில் படுக்க வைத்து விட்டதே என்று வருந்துகிறாள் கவிதா. இன்று தன்னை பார்க்க வரும் தோழிகள், உற்றார், உறவினர் என்று அனைவரிடமும் சாலியில் போகும்போது கவனம் அதில் மட்டும் இருக்கட்டும் என்னைப் போல் கவனத்தை சிதறவிட்டு பின் வருந்தாதீர்கள் என்று ஒன்றிற்கு நூறு முறை சொல்கிறாள். 

சாலையில் கவனம் மகிழ்ச்சியான பயணம். 

இந்த கதை சாலையில் வண்டியை செலுத்தும் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடம். சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் வரைய முடியும். .