Friday, May 27, 2016

நியூ ஜெர்சியில் காஞ்சி பெரியவரின் 123-வது ஜெயந்தி விழா

நடமாடும் தெய்வமாய் நம்மிடையே வாழ்ந்த ஜகம் புகழும் ஜகத்குரு ஸ்ரீ  ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 123-வது ஜெயந்தி விழா உலகெங்கிலும் பல இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக இம் மாமுனியின் ஜெயந்தி விழா கொண்டாட்டங்களை "ஸனாதன தர்ம பௌண்டேஷன்" (Sanatana Dharma Foundation) வெகு விமரிசையாக மே 22ஆம் தேதி வட அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் கொண்டாடியது. 

காலை 8 மணியளவில் தொடங்கிய நிகழ்ச்சிகள் மாலை 7 மணி வரையிலும் நடைப்பெற்றது. கோ பூஜைகணபதி ஹோமம்ஆவஹந்தி ஹோமம் என்று ஒன்றன் பின் ஒன்றாக நடைப்பெற்ற காலை நிகழிச்சிகளில் மகாபெரியவரின் பாதுகைகள்மற்றும் விக்ரஹங்களுக்கு அபிஷேகம், அர்ச்சனை நடைப்பெற்றது. அதன் தொடர்ச்சியாக 18 இளம் சிறுமிகள் பங்குபெற்ற கன்யா பூஜை9 சுமங்கலிகள் பங்கு பெற்ற சுவாசினி பூஜை3 தம்பதிகளுக்கு தம்பதி பூஜைமற்றும் வடுக பூஜை என பக்தி மணம் எங்கெங்கிலும் கமழ நடந்தது.  பூஜைகளைத் தொடர்ந்து வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. 

சிறிது இடைவேளைக்குப் பின் மாலை நிகழ்ச்சிகளின் தொடக்கமாக பக்தர்கள் குழு திருப்புகழ்ப் பாடல்களை பாடினர். அதனைத் தொடர்ந்து குரு நாமசங்கீர்த்தன இசை நடைப்பெற்றது. அதன் பின்னர் காஞ்சி மடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அனுக்ரஹ பாஷணம் ஒளிபரப்பப்பட்டது.  அன்றைய நிகழ்சிகளின் முத்தாய்ப்பாக155 குழந்தைகள் பங்கு பெற்ற மஹா பெரியவா அஷ்டோத்திர அர்ச்சனை நிகழ்ச்சி. அந்த பிஞ்சு குழந்தைகளின் "ஹர ஹர சங்கர  ஜய ஜய சங்கர" கோஷம் விண்ணை பிளந்ததுகூடியிருந்த அனைவருக்கும் ஒரு கணம் இது நியூ ஜெர்சியா அல்லது கஞ்சிபுரமா என்ற சந்தேகம் எழுந்தது என்று சொன்னால் அது மிகை அல்ல. 

அர்ச்சனை முடிந்து பெரியவரின் விக்ரஹம் ரிஷப வாஹனத்தில் கோவிலின் வெளி ப்ராஹாரத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. நாதஸ்வர இசைதிருப்புகழ்சங்கர கோஷம் என பக்தி கடல் பெருக்கில் மகாபெரியவரின்  ரிஷபவாகன காட்சியைக் கண்டு கண்கள் பனித்தன. நிகழ்ச்சியின் முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் இரவு உணவும் ஸனாதன தர்ம அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வந்திருந்த பக்தர்கள் அனைவரும் ஜெயந்தி விழாவில் பங்கு கொண்டு மஹா பெரியவரின் அருட்கடலில் மூழ்கி அவரின் ஆசியைப்பெற்று இல்லம் திரும்பினர்.

இந்த அமைப்பு மஹா பெரியவருக்கு நியூ ஜெர்சி-யில் ஒரு மணிமண்டபம் கட்டவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  முதல் கட்டமாக  ஜெர்சியில் ப்ளேமிங்டன் (Flemington) என்ற இடத்தில் பத்து ஏக்கர் நிலம்  வாங்கி அதில் மணி மண்டபம் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அமைப்பினைப் பற்றி மேலும் விவரங்களுக்கு http://mahaperiyava.org என்ற இணையத் தளத்தையோ அல்லது sdf@mahaperiyava.org என்கிற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.  

This article as been published in www.dinamalar.com with their edits. This is the original article that I shared with dinamalar. 

Wednesday, January 13, 2016

பெண்

பொறுமையின் வடிவம் நம்மை -சுமப்பவள் 
தாய் தெய்வம்போல் என்றீர்
பூமி நம்மை சுமப்பதால் - அவளை 
பூமித் தாய் என்றீர் 
உயிர்கள் வாழ்வதற்க்கு வான்மழை - வேண்டும் 
வானம் பார்த்தபூமி என்றீர்


வானம் பொய்த்தால் பூமியில் - பட்டினி 
பஞ்சம்  மேலிடும் என்றீர்
கொட்டித் தீர்க்கும் இடிமின்னல் - கூடிய
வான்மழையை வருணன் என்றீர்
வருணன் ஆண்மகன் அவன் - இறங்கினால்தான்
பூமி வாழும் என்றீர்

பூமி கொண்ட நீரை - உறியும்
சூரியன் ஆண்மகன் என்றீர்
பூமித்தாய் நீரும் மரங்களும் - தாங்கி
வானுக்கு அனுப்பும் மழைநீரை
திருப்பித் தரும் வருணன் - தன்னலமில்லா
கொடை  வள்ளல் என்றீர்

சூரியனும் வருணனனும் இல்லாது - போனால்
பூமிவாழ வாய்ப்பில்லை என்றீர்
இயற்கையிலும் பெண் வாழ - அவளே
பாரம் சுமந்து உழைக்க
அவள் சிறப்புடன் வாழ - ஆண்மகன்
தயையே தேவை என்றீர்

வான்மழை பெய்யவும் பூமியின் - தயை
வேண்டும் என்றுசொல்ல ஏன்மறந்தீர்